For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொத்தடிமை கொலை.. காஞ்சியில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

விஞ்ஞான உலகம், கம்யூட்டர்மயம் என்று உலகம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்க, இன்னும் தமிழககிராமங்களில் கொத்தடிமைக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கொத்தடிமை கொடுமைகளை நீக்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல முயற்சிகள்மேற்கொண்டாலும், கிராமங்கள் இன்னும் திருந்தியபாடில்லை என்பதற்கு காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளகொத்தடிமைக் கொலை அதிர்ச்சிகரமான சாட்சியாக உள்ளது.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் இருக்கிறது ரெட்டிப் பாளையம். இங்கு தமிழ் ஜெயம் சேம்பர் என்ற பெயரில்செங்கல் சூளை வைத்திருப்பவர் ஐசக் பிரபாகரன். இவரது சகோதரர் மனோகரன், இவரும் அதே கிராமத்தில்செங்கல் சூளை நடத்தி வருகிறார். மற்றொரு சகோதரர் ஜெடி. இவர் கொங்கனச்சேரி கிராமத்தில் செங்கல் சூளைநடத்தி வருகிறார்.

சகோதரர்கள் மூன்று பேரும் நடத்தி வரும் சூளையில் பலர் கொத்தடிமை போல பணி புரிந்து வந்தனர். இந்தத்தொழிலாள்கள் அனைவரும் குறிப்பிட்ட தொகையை முன் பணமாக பெற்றுக் கொண்டு இரவு பகல் பாராமல் மாடுபோல் உழைத்து வந்தனர்.

செங்கல் சூளையில் மேஸ்திரியாக ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வேலை பார்த்துவந்தார். இவரது சொந்த ஊர் ஆற்காடு அடுத்த வாலாரம். ஐசக் பிரபாகரனிடம் முன் பணம் பெற்றுக்கொண்டுகொத்தடிமையாக பணிபுரிந்து வந்தார். இவரது கடின உழைப்பால் சூளை வருமானம் அதிகரித்தது. ஆனால்இவருக்கு மட்டும் வருமானம் அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில், ஐசக் பிரபாகரனின் அண்ணன் ஜேடி, சுந்தரத்தை வேலைக்கு அழைத்தார் முன் பணமாகஎட்டாயிரம் ரூபாயும் கொடுத்தார். இதுகுறித்து ஐசக் பிரபாகரனிடம், சுந்தரம் கூறியுள்ளார். இதனால் பிரபாகரன்கோபமடைந்தார். அங்கு போகக்தே, சம்பளம் கூடுதலாக தருகிறேன் என்றார். ஆனால் சுந்தரம் நான் வேறுசூளையில் வேலைக்குச் செல்கிறேன் என்றிருக்கிறார். வேறு இடத்திற்குச் சென்றால் கொலைதான் நடக்கும் என்றுஐசக் மிரட்டவே, பயந்துபோன சுந்தரம் அங்கேயே பணிபுரிந்திருக்கிறார்.

இந்த நிலையில், ஜேடி கொடுத்த எட்டாயிரம் ரூபாய் பணம் காலியாகியது. சில மாதங்களுக்குப் பிறகு பணத்தைசுந்தரத்திடம் திருப்பிக் கேட்டார் ஜேடி. வேலைக்கும் சுந்தரம் வரவில்லை, பணமும் தரவில்லை என்றவுடன்ஆத்திரமடைந்தார் ஜேடி.

வேலைக்கு வா இல்லை பணத்தைத் திருப்பிக்கொடு என்று மிரட்டி அடிக்கவும் செய்துள்ளார் ஜேடி. பலமாகதாக்கியதில் சுந்தரம் அலறினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு இருவரையும் விலக்கிவிட்டனர். இந்த சம்பவம் முடிந்த பிறகு, வியாழக்கிழமை ஐசக் பிரபாகரன் அழைத்ததாக கூறி சுந்தரத்தை செங்கல்சூளைக்கு சிலர் அழைத்துச் சென்றனர். அங்கு ஐசக் பிரபாகரன் , சுந்தரத்தை கொடுமைபடுத்தியதாகத் தெரிகிறது.

இந்தச் சூழ்நிலையில் வியாழக்கிழமை காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் சூளைக்கு வேலைக்குச் செல்ல,அங்கு சுந்தரம் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். சுந்தரத்தை அடித்துத்தான் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றுகாவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. கிராம மக்களும் இதையே சொல்கிறார்கள்.

சுந்தரம் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி ரெட்டிப்பாளையம் கிராமம் முழுக்க பரவியது அடுத்த சிலநிமிடங்களில் கிராமமே திரண்டது. ஐசக் சகோதரர்களுக்குச் சொந்தமான செங்கல் சூளைகளுக்குத் தீ வைத்தனர்.இதில் 5 சூளைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின. செங்கல் சூளை உரிமையாளர்கள் அனைவரும்தலைமறைவாகிவிட்டனர்.

செங்கல் சூளை உரிமையாளர்களை கைது செய்யவேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடஆரம்பித்துள்ளனர். காஞ்சிபுரம் கிராமப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொத்தடிமையாக இருந்து கொலை செய்யப்பட்ட சுந்தரத்திற்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X