25 நாட்கள் ... 2 தூதுகள் ... 4 சந்திப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rajkumar - Gopal
கேசட்டில் குரலை பதிவு செய்வதற்காக ராஜ்குமாருக்கு உதவும் நக்கீரன் கோபால்
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் நாடகம் தொடங்கி 25 நாட்கள் ஓடி விட்டன.

இரண்டு முறை காட்டுக்குத் தூது, இரு மாநில முதல்வர்கள் நான்கு முறை சந்திப்பு, கடையே வைக்கும் அளவுக்கு ஆடியோ, வீடியோ கேசட்டுகள்பரிமாற்றம் என இந்த கடத்தல் நாடகத்தில் பல காட்சிகள். வரிசையாக தொகுத்துப் பார்த்தால்.... பார்ப்போமே!

ஜூலை 30 - இரவு 9 மணியளவில் காஜனூர் தோட்ட வீட்டிலிருந்து நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூவரும் வீரப்பன் கும்பலால்கடத்தப்பட்டனர்.

ஜூலை 31 - வீரப்பனுடன் பேச நக்கீரன் கோபால் தூதராக செல்வார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

ஆகஸ்ட் 1 - வீரப்பனை சந்திக்க நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றார்.

ஆகஸ்ட் 2 - காட்டில் இருந்து தகவல் வராத நிலையில, வீரப்பனின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் பரிசீலித்து ஏற்போம் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

ஆகஸ்ட் 3 - தாளவாடி பகுதியில் மழை பெய்து வருவதால் வீரப்பனை கோபால் சந்திக்கவே இல்லை என்று தமிழக டி.ஜி.பி. சர்மா தகவல் வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆகஸ்ட் 4 - மர்ம நபர் மூலம் வீரப்பன் அனுப்பிய கேசட் மட்டும் வந்துள்ளது என்று டி.ஜி.பி. சர்மா அறிவித்தார்.

ஆகஸ்ட் 5 - வீரப்பனிடம் இருந்து வந்துள்ள கேசட்டில் சில கோரிக்கைகள் உள்ளன. ஆனால், வீரப்பனை கோபால் சந்திக்கவில்லை. கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என்றார் கருணாநிதி.

ஆகஸ்ட் 6 - வீரப்பன் 10 கோரிக்கைகள் விடுத்துள்ளார். அவற்றை பரிசீலித்து நாங்கள் சாதகமான பதில் அளித்துள்ளோம். அதை ஏற்றுராஜ்குமாரை வீரப்பன் விடுவிப்பார் என்று நம்புகிறோம் என்று இரு மாநில முதல்வர்களும்.தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 7 - தமிழக, கர்நாடக அரசுகளின் பதில் குறித்து விளக்குவதற்காக நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றார்.

ஆகஸ்ட் 8 - வீரப்பன் பதிலுக்காக இரு மாநில அரசுகளும் காத்திருந்தன. நல்ல பதில் வரும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

Gopal with Rajkumar

2வது முறையாக காட்டுக்குள் சென்ற நக்கீரன் ஆசிரியர் கோபாலுடன் வீரப்பனிடம் பிணைக் கைதிகளாக உள்ளநடிகர் ராஜ்குமார் மற்றும் இருவர். இடது ஓரத்தில் நிருபர் சிவசுப்பிரமணியன்.

ஆகஸ்ட் 9 - ராஜ்குமார் மற்றும் அவருடன் கடத்தப்பட்டவர்களை மீட்க சிறிது காலம் ஆகலாம் என்று தமிழக போலீஸ் தெரிவித்தது.

ஆகஸ்ட் 10 - கோபால் அனுப்பிய ஆடியோ கேசட் மற்றும் புகைப்படங்கள் வந்தன. கேசட்டில் ராஜ்குமார் பேசியிருந்தார்.

ஆகஸ்ட் 11 - கோபால் காட்டில் இருந்து சென்னை திரும்பினார். அவர் கொண்டு வந்த விடியோ காசெட் போட்டு பார்க்கப்பட்டது. ராஜ்குமார் உள்படகடத்தப்பட்டவர்கள் நன்றாக இருப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

ஆகஸ்ட் 12 - வீரப்பனின் நிபந்தனைப்படி தமிழக தீவிரவாதிகள் ஐவரை ஜாமீனில் விடுவிக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்தது.

ஆகஸ்ட் 13 - மீண்டும் அரசு பதில்களுடன் நக்கீரன் கோபால் காட்டிற்குச் செல்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆகஸ்ட் 14 - ராஜ்குமார் கடத்தல் விவகாரம் லட்சக்கணக்கான தமிழர், கன்னடர்களை பாதிக்கும் விஷயம். எனவே இதுதொடர்பாக யாரும்குறுக்குசால் ஓட்ட வேண்டாம் என்று கருணாநிதி திடீர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆகஸ்ட் 16 - வீரப்பன் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். ராஜ்குமாரை விடுவியுங்கள் என்று இரு மாநில முதல்வர்களும் கூட்டாககோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையுடன் கோபால் மீண்டும் காட்டுக்கு பயணம்.

ஆகஸ்ட் 18 - தமிழ் தீவிரவாதிகள் விடுதலையில் சிக்கல் எழுந்தது. ஜாமீனில் வெளிவர மறுத்தனர் அவர்கள்.

ஆகஸ்ட் 19 - தமிழ் தீவிரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் தமிழக முதல்வர்.

ஆகஸ்ட் 20 - காட்டுக்குள் சென்ற கோபாலிடம் இருந்த தகவலை எதிர்பார்த்து இரு மாநில அரசுகளும் காத்திருந்தன.

ஆகஸ்ட் 23 - அரசு தூதர் திரும்பிய பின்னர் தான் தீவிரவாதிகள் விடுதலை பற்றி அரசு முடிவெடுக்கும் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி.

ஆகஸ்ட் 24 - தூதர் கேசட்டுடன் திரும்பினார்.

ஆகஸ்ட் 25 - மீண்டும் தமிழக - கர்நாடக முதல்வர்கள் சென்னையில் ஆலோசனை.

(நாடகம் தொடரும்?)

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+