ரஜினிக்கு ராஜ்குமார் நன்றி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
என் குடும்பத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று நடிகர் ராஜ்குமார், ரஜினிகாந்துக்கு உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார், அரசுத் தூதர் கோபால் மூலம் வீடியோ கேசட் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கேசட்டில் ராஜ்குமார், ரஜினிகாந்துக்கு விடுத்துள்ள வேண்டுதலில், நீங்கள் எனக்கு தைரியம் கூறியுள்ளீர்கள். ரொம்ப நன்றி. நீங்கள், என்சார்பில் என் குடும்பத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும்.
என் குடும்பத்தாருக்கு தைரியம் கூறி அவர்களைத் தேற்ற வேண்டும். நீங்கள் நீண்ட காலம் சினிமா துறையில் சேவை புரிய வேண்டும்.
கடவுள் நம்மைக் கைவிட மாட்டார். நான் வரும்வரை அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications