உடுமலை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை துவங்கியது

Subscribe to Oneindia Tamil

கோவை:

உடுமலை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் தொடங்கியது.

உடுமலையில் கடந்த 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. வணிக வளாகம் அருகே நடந்தஇந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் இறந்தனர்.

இது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரியாஸ் ரகுமான் என்பவர்அப்ரூவராக மாறி விட்டார். இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கு விசாரணை தனி நீதிமன்ற நீதிபதி தணிகாசலம்முன்னிலையில் ஆகஸ்ட் 24ம் தேதி துவங்கியது. விசாரணையில், 5 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.

இந்த விசாரணை தனி அறையில் நடந்ததால், பத்திரிக்கையாளர்கள் யாரும் நீதிமன்ற வாளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் வழக்குவிசாரணை வரும் ஆகஸ்ட் 28ம் தேதி துவங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+