தடா கைதிகள் வழக்கு விசாரணை 28-க்கு ஒத்திவைப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விடுவிக்கக் கோரியுள்ள மைசூர் சிறையில் உள்ள 51 தமிழ்த் தடா கைதிகளின் ஜாமீன்மனு விசாரணையை இம்மாதம் 28 ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திர பிரசாத் ஒத்திவைத்தார்.
வீரப்பனுக்கு உதவி செய்ததாக 1992 ம் ஆண்டு 12 பெண்கள் உள்பட 51 பேர் கைது செய்யப்பட்டு தடா வழக்கின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியுள்ள வீரப்பன், அவரை விடுவிக்க வேண்டுமென்றால் தடா வழக்கின் கீழ்கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, அவர்கள் மீதான தடா வழக்கை வாபஸ் பெற மைசூர் தடா கோர்ட்டில் அரசு மனுத்தாக்கல்செய்தது. இதற்குக் கோர்ட் அனுமதி வழங்கியது.
தடா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 51 பேரும், தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல்செய்தனர். 21 ம் தேதி 25 பேரும், 24 ம் தேதி 26 பேரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 51 பேரின் மனுக்கள்28 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார். அன்று 51பேரும் ஆஜராக வேண்டாம். அவர்களது வக்கீல்கள் வாதாடினால் போதும் என்றும் கூறினார் நீதிபதி ராஜேந்திரபிரசாத்.












Click it and Unblock the Notifications