அரசு அதிகாரிகளைக் கண்டித்து தாமரைக்கனி பேரணி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கும் அதிகாரிகளைக் கண்டித்துஅ.தி.மு.க., எம்.எல்.ஏ. தாமரைக்கனி தலைமையில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை நடந்தது. பேரணியின் முடிவில் சிலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை கூடுதல் பள்ளிக்கட்டிடங்களைத் திறக்க விடாமல் செய்த நகரசபை தலைவர் மற்றும் விருதுநகர் மாவட்டவருவாய்த்துறை, காவல்துறை ஆகியோரின் ஜனநாயக விரோதப் போக்கிற்குக் கண்டனம், பள்ளிகளுக்கு நிரந்தரக்கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததற்குக் கண்டனம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி மேம்பாட்டுநிதியிலிருந்து 61 லட்சம் ரூபாய் ஒதுக்கிய தாமரைக்கனிக்கு நன்றி தெரிவித்ததுமாகும்.












Click it and Unblock the Notifications