கோவையில் மேலும் 3 உழவர் சந்தைகள்
கோவை:
கோவை மாவட்டத்தில் மேலும் 3 உழவர் சந்தை ஆகஸ்ட் 30-ம் தேதிதிறக்கப்படுகிறது. இதனை சென்னை மேயர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கோவையில் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சி, உடுமலை ஆகியஇடங்களில் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்படுவதைத் தொடர்ந்து மேலும் 3உழவர் சந்தைகளை திறக்க அரசு முடிவு செய்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் மேட்டுப்பாளையம் உழவர் சந்தைகள்ஆகஸ்ட் 30-ம் தேதி திறக்கப்படுகிறது. திருப்பூர் வடக்குப் பகுதியில் பெருமாநல்லூரில்இந்த சந்தை நிறுவப்பட்டுள்ளது. இங்கு 1.5 ஏக்கர் நிலத்தில் 80 கடைகள்அமைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் தெற்குப் பகுதியில் 1.35 ஏக்கர் நிலத்தில் 8.6 லட்சம் செலவில் கடைகள்அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் கோவை ரோட்டில் உழவர் சந்தைஅமைக்கப்பட்டுள்ளது. ரூ. 7 லட்சம் செலவில் 78 கடைகள் இங்குஅமைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி திறக்கப்படுகிறது. இந்தசந்தைகளை சென்னை மேயர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications