"கரோர்பதி" நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "கோன் பனேகா கரோர்பதி" (யார் கோடீஸ்வரர் ஆவார்) என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடைக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் பிளஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோன் பனேகா கரோர்பதி என்ற நிகழ்ச்சி ஒரு சூதாட்ட நிகழ்ச்சியாகும். இதற்குத் தடை விதிக்கவேண்டும் என்றுகோரி கல்கத்தாவில் வசிக்கும் தேபஷ்மிதா ஸ்ரீநதர் என்ற பெண் வழக்குத் தொடர்ந்தார்.

இம் மனுவை ஏற்ற கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்குலி, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தி நியூ இந்தியா டெலிவிஷன் நிறுவனத்துக்குஇடைக்காலத் தடை விதித்தார்.

இத் தடை உத்தரவை எதிர்த்து கல்கத்தா உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சிடம் தி நியூ இந்தியா டெலிவிஷன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி மாத்தூர், பாரிந் கோஷ் இருவரும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடைக்குத்தடை விதித்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்த தேபஷ்மிதா ஸ்ரீரகுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். இவ் வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+