எல்லை தாண்டாது இந்தியா ... பெர்னாண்டஸ்
டெல்லி:
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளைத்தாக்குவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படிச் செய்தால் பொதுமக்கள் தரப்பில் பெரியஅளவில் உயிர்ப்பலி ஏற்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
டெல்லியில் அவர் அளித்த ஒரு பேட்டியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்மற்றும் எல்லையின் பிற பகுதிகளில் தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான்அமைத்துள்ளது. ஆனால் இவையெல்லாம் தனிப்பட்ட பகுதிகளில் இல்லை. மக்கள்நெருக்கமுடைய பகுதிகளில் அமைந்துள்ளன. எனவே எல்லையைக் கடந்து ராணுவத்தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது.
எல்லைக் கோட்டைக் கடந்து ராணுவ நடவடிக்கை எடுத்தால், அப்பாவிபொதுமக்கள்தான் பலியாவார்கள். இது மனிதநேயத்திற்கும் இழுக்காக அமையும்.மனித நேயத்தைக் காப்பதில் இந்தியா எப்போதும் தவறு செய்யாது.
இம்மாதிரியான கடும் நடவடிக்கை இல்லாமலேயே பாகிஸ்தானின் தீவிரவாதத்திட்டங்களை இந்தியா சமாளிக்கும். கடைசி எதிரி நமது மண்ணிலிருந்துவெளியேற்றப்படும் வரை இந்தியா விடாமல் போராடும்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்குத் தேவைப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்கபாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
நேரடியாக மோதும் தைரியம் இல்லாததால், மறைமுகப் போரில் ஈடுபட்டுள்ளதுபாகிஸ்தான். இதை இந்தியா உறுதியுடன் சமாளிக்கும். இந்திய எல்லைக்குள்ஆக்கிரமிப்பு செய்வது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிஊடுறுவல்காரர்களை அனுப்பி வைப்பது ஆகியவை மூலம் இந்தியாவைச் சீண்டிவருகிறது பாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டுத்தீவிரவாதிகள். அவர்களிடம் அதி நவீன ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள்உள்ளன. வெடிபொருட்கள், ஆர்.டி.எக்ஸ். போன்ற வெடி மருந்துகள் ஆகியவைஅவர்களிடம் உள்ளன என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications