இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயர்ந்துள்ளது ... பா.ஜ.க.
நாக்பூர்:
பொக்ரானில் அணு குண்டு வெடித்த பிறகு சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காருலட்சுமண் கூறியுள்ளார்.
நாக்பூரில் நடந்து வரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் தலைமை வகித்து பேசுகையில், கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில்இந்தியா அணுகுண்டு வெடித்தது. இதையடுத்து பல நாடுகள் பொருளாதாரத் தடை விதித்து இந்தியாவை பயமுறுத்தின. ஆனால் இதற்கெல்லாமல்பயப்படாமல் இந்திய மக்களும், பிரதமர் வாஜ்பாய் தலைமயிலான பா.ஜ.க. அரசும் உறுதியாக இருந்தனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையில் கடலளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்குபாகிஸ்தான் தவிர உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியாவுக்கு நல்ல உறவு நிலவுகிறது.
இந்தியா தனிமைப்படுத்த சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. நமது அணு ஆயுதக் கொள்கையை விமர்சித்த பல மேலை நாடுகள்இன்று நமது நிலையை உணர்ந்து அதை அங்கீகரித்துள்ளன.
உலக விவகாரங்களில் இந்தியாவின் பங்கு முக்கியமானது, தவிர்க்க முடியாதது என்பதை உலக நாடுகள் இன்று உணர்ந்து கொண்டுள்ளன.
எனவே இந்தியாவின் பொறுப்பை உணர்ந்து, சர்வதேச விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் வகையில் பா.ஜ.க. அரசு கூடுதல் பொறுப்புடன்செயல்பட வேண்டும் என்றார் அவர்.
மொத்தம் 47 பக்கம் அடங்கிய உரையை பங்காரு லட்சுமண் படித்தார். இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடக்கிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications