ராஜ்குமார் விடுதலை எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த மாதம் 30 ம் தேதி இரவு வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட ராஜ்குமார் இன்னும் வீடு திரும்பாத நிலையில்,கர்நாடக, தமிழக அவரை மீட்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ராஜ்குமார் எப்போதுவிடுதலையடைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜ்குமாரை மீட்பதற்கு அரசு தூதர் காட்டிற்கு சென்ற நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால், இரு முறைகாட்டிற்குச் சென்று விட்டு திரும்பி விட்டார். இதுவரை கோபாலின் பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றுமும்இல்லை. மூன்றாவது முறையாக 28 ம் தேதி சென்னையில் இருந்து காட்டிற்கு கிளம்புகிறார் கோபால்.

இந்த முறை உறுதியாக மீட்டு வந்து விடலாம் என்று நம்புகிறார் கோபால். வீரப்பனின் காட்டுப்பகுதியில்அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி, கர்நாடக சிறையில் இருக்கும் 51 பேர் உள்படதடா கைதிகள் மேல் கர்நாடக அரசு பதிவு செய்துள்ள வழக்குகள் அத்தனையும் வாபஸ் பெற வேண்டும் என்கிறநிபந்தனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளான் வீரப்பன்.

28 ம் தேதிக்குள் வீரப்பன் கேட்டிருக்கும் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்ற தேவையான முயற்சிகளைஎடுத்து நக்கீரன் ஆசிரியரிடம் அரசு ஒப்படைக்கும் என்று தெரிகிறது.

வீரப்பன் கோரிக்கைகளில் ஒன்றான தமிழ் தீவிரவாதிகள் ஐந்து பேர் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ்பெற்று விடுதலை செய்கிறோம் என்று அரசு அறிவித்துவிட்டாலும், நீதிமன்ற முறைப்படி ஐந்து தீவிரவாதிகளும்வெளியே வருவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. எனவே அவர்கள் வெளியே வர இன்னும் பத்து நாட்கள் கூடஆகலாம் என்று நினைக்கிறது தமிழக அரசு.

இது அரசின் கையில் உள்ள பிரச்சனையில்லை. நீதிமன்ற நடைமுறை என்கிறார்கள் தமிழக காவல்துறைஅதிகாரிகள். நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம், ஒவ்வொரு கோரிக்கையாக பேசிக் கொண்டு வந்த வீரப்பன் ஐந்துதீவிரவாதிகள் பற்றிக் கேட்கும் பொழுது உடனே விடுங்கன்னு சொன்னேன். யாரும் செய்யலை என்றுகோபமாகவே பேசியிருக்கிறான் வீரப்பன்.

ராஜ்குமார் மீட்பு விவகாரம் நாளுக்குநாள் இழுத்துக் கொண்டு போவதில் இரு மாநில அரசுகளும் ஏக கவலையில்இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+