மும்பை ரயில் ஏறி கின்னஸ் சென்ற முதியவர்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

26 ஆண்டுகளாக ரயில் டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்த மும்பையைச் சேர்ந்த முதியவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

தெற்கு மும்பையின் முகமது அலி ரோட்டைச் சேர்ந்தவர் பக்ரூதீன் ஹூசேன் துக்லா. வயது 62. இவர் இந்த ஆண்டு ஜனவரி 26 ம் தேதி நடந்த குடியரசுதினவிழாவில் கலந்து கொள்வதற்காக, 19 ம் தேதி டெல்லி சென்ற மும்பை-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக, 1973 ம்ஆண்டு டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார்.

26 ஆண்டுகளாக அந்த டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்து இந்த ஆண்டு டெல்லியில் நடந்த 50 வது குடியரசு தினத்தில் கலந்து கொண்டார். இப்போதுபக்ருதீனின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்ருதீன் கூறுகையில், என் குடும்பத்தாரும், நண்பர்களும் வற்புறுத்தியதால்தான் நான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு விண்ணப்பித்தேன்.ஆகஸ்ட் 17 ம் தேதி எனது பிறந்தநாள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசாகும். இதே ரயிலில் சென்றுஎனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாட விரும்புகிறேன் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+