வங்கதேசத்தில் இரு விபத்துக்களில் 20 பேர் சாவு
தாக்கா:
வங்கதேச தலைநகர் தாக்காவில் ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த தீவிபத்தில் 12 பேர் கருகி இறந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இந்த பரிதாபச் சம்பவம் நடந்தது. தீவிபத்தில் இறந்த 10 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலர்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு மாடி கொண்ட அந்த நிறுவனத்தின் நான்காவது மாடியில் இந்த விபத்து நடந்தது. இறந்தவர்களில் பெரும்பாலோர், மூச்சுத் திணறி இறந்தனர்.தீக்காயத்தில் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை என தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார்.
கட்டிடடம் இடிந்து 8 பேர் சாவு:
வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்னொரு பரிதாபமான சம்பவமும் நடந்தது. தெற்கு வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங்க் பகுதியில், புதிதாககட்டப்பட்டு வரும் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி எட்டு பேர் இறந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
கட்டடத்தின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கீழே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இறந்த எட்டுபேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில்சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications