சாம், அதி நவீன ஆயுதங்களால் கலக்கும் புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் வசம் தரையிலிருந்து வானிலுள்ள இலக்கை நோக்கி ஏவப்படும்ஏவுகனைகள் (சாம்) உள்பட பல அதி நவீன தாக்குதல் ஆயுதங்கள் இருப்பதாககூறப்பட்டுள்ளது.
இலங்கைப் பத்திரிகைகளில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. சாம் தவிர அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஆயுதங்களும் புலிகளிடம் இருப்பதாகத் தெரிகிறது.சமீபத்தில்தான் இவற்றை புலிகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை தளம்,பலாலி விமான தளப் பகுதி, பாதுகாப்பு தலைமையகம் ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகள் மும்முனைத் தாக்குதல் நடத்தினர். விடுதலைப் புலிகளின் சரமாரியானதாக்குதலால் நிலைகுலைந்து போன கடற்படை வீரர்கள், விடுதலைப் புலிகளின் புதியஆயுத பலம் குறித்துத் தெரிந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான வெள்ளைப் புலிகள் இந்தத் தாக்குதலைநடத்தினர். புலிகளிடமிருந்து வந்த 130 மிமி ஆர்ட்டில்லரி கடற்படை வீரர்களுக்குப்பீதியைக் கொடுத்தது.
இதேபோல, வட கிழக்குப் பகுதியில், சென்று கொண்டிருந்த இலங்கை விமானப்படைமிக் 27 ரக விமானத்தை நோக்கி, ஒரு சாம் ஏவப்பட்டது. இதிலிருந்து மயிரிழையில்அந்த விமானம் தப்பியது. விடுதலைப் புலிகள்தான் இந்த சாமை ஏவினர். புலிகளின்கடற் பிரிவு படகிலிருந்து இந்த சாம் ஏவப்பட்டது. இதுவும் இலங்கை பாதுகாப்புப்படை வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications