மூப்பனார் முதல்வர் என்றால்தான் அதிமுகவுடன் கூட்டணி ... த.மா.கா.
சேலம்:
மூப்பனாரை முதல்வராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதிமுகவுடன் சட்டசபைத்தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சேலத்தில் கூடிய எஸ்.சி,எஸ்.டி. பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட தமாகா எஸ்.சி, எஸ்.டி. பிரிவு செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமாள் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
வரும் சட்டமன்றத் தேர்தலில் மூப்பனாரை தமிழக முதல்வராக ஏற்றுக் கொள்ளும்கூட்டணியிலேயே தமாகா இடம் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
செயல்வீரர்கள் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களைச் சந்தித்த வள்ளல்பெருமாள்கூறுகையில், தொண்டர்களின் உணர்வின் பிரதிபலிப்புத்தான் இந்த தீர்மானம்.இருப்பினும், தேர்தல் கூட்டணிக்கான இறுதி முடிவு தேர்தல் சமயத்தில்தான்எடுக்கப்படும் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி என்றால் அதிமுக, மூப்பனாரை முதல்வராக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் கூட்டத்தில் பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications