பெங்களூரில் தடையுத்தரவு 31-ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் அமலில் உள்ள போலீஸ் 144 தடையுத்தரவு வரும் 31 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று நகர போலீஸ் கமிஷனர் டி.மடியால்தெரிவித்தார்.
கடந்த மாதம் 30-ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை, சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் கடத்திச் சென்றதையடுத்து நகரில்வன்முறை வெடித்தது. இதையடுத்து தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ராஜ்குமார் இன்னும் விடுதலையாகவில்லை. மேலும், இன்னும் சில தினங்களில் ராஜ்குமார் விடுதலையாகும் சாத்தியம் உள்ளதால், உளவுத்துறைப்போலீஸார், பெங்களூர் நகரில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து தடையுத்தரவை நீட்டிக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications