ஒலிம்பிக்கிற்குப் பிறகும் பயஸ், பூபதி இணைந்து ஆடுவர்"

Subscribe to Oneindia Tamil

மும்பை:

லியாண்டர் பயஸும், மகேஷ் பூபதியும் சிட்னி ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகும்தொடர்ந்து சேர்ந்து விளையாடுவார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்தலைவர் அனில் கண்ணா கூறியுள்ளார்.

மும்பையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருவரின் பெற்றோர், அகிலஇந்திய டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் கண்ணா ஆகியோரின் இடவிடாதமுயற்சியின் காரணமாகவே, இரு வீரர்களும் மீண்டும் இணைந்து விளையாட முக்கியக்காரணம்.

இரு வீரர்களும் முன்பை விட இப்போது நல்ல முதிர்த்தியுடன் உள்ளனர். நாட்டுக்குபெருமைகளைத் தேடித் தர உறுதி பூண்டுள்ளனர். விளையாட்டுக்கு வந்து விட்டால்,முதலில் விளையாட்டு, பிறகே நட்பு என்பதை உணர்ந்துள்ளனர்.

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் டென்னிசில், இந்தியாவுக்கு ஒன்று அல்லது இரண்டுபதக்கங்கள் கிடைக்கலாம் என்று நம்புகிறேன் என்றார் கண்ணா.

கடந்த ஆண்டு இரண்டு கிரான்ட்ஸ்லாம் பட்டங்கள் மற்றும் பிற பட்டங்களுடன்டென்னிஸ் உலகை ஆட்சி புரிந்த பயஸும், பூபதியும் திடீரென பிரிந்தனர். இதற்குக்காரணம் மகேஷ் பூபதியின் பயிற்சியாளர் என்ரிகோ பிப்பர்னோதான் காரணம்என்றுகூறப்பட்டது.

பிரிந்த பின் இருவரும் பல்வேறு காரணங்களால் அதிகம் விளையாடவில்லை.வெற்றிகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் இரு வீரர்களும்மீண்டும் சேர்ந்து விளையாடத் துவங்கியுள்ளனர்.

அடுத்த மாதம் சிட்னி நகரில் துவங்கும் ஒலிம்பிக் போட்டியில், டென்னிஸில்இந்தியாவுக்குக் குறைந்தது ஒரு தங்கம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த1996-ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பயஸ்,வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் புதிய பெருமை சேர்த்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+