சென்னை, கோவை பெட்ரோலியப் பைப்லைன் பணி 2002-ல் முடியும்
ஊட்டி:
சென்னை-கோவை இடையே பெட்ரோலியப் போக்குவரத்திற்கு பைப் லைன்பதிக்கப்படும் பணி 2002ம் ஆண்டிற்கும் முடிவடையும் என பெட்ரோலியத் துறைஇணை அமைச்சர் பொன்னுச்சாமி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெட்ரோலியத் துணை இணை அமைச்சர் பொன்னுச்சாமிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னையிலிருந்து கோவை வரையில் பெட்ரோலிய பைப் லைன் அமைக்கும் பணிவிரைவில் துவங்கப்படும். இதற்கான நிலம் கையகப் படுத்தப்பட்டு விட்டது. இந்தபணி அடுத்த 2002ம் ஆண்டிற்குள் முடிவடையும்.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் சேர்மன் நியமிப்பதில் உள்ள சிக்கல் விரைவில்தீர்க்கப்படும். இங்கு சுரங்கப்பகுதிக்கு நிலம் அளித்தவர்கள் இந்தப் பதவியை வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளனர். இதனால் சிக்கல் நீடித்து வருகிறது. இது முடிவுக்குகொண்டு வரப்படும்.
எரிவாயுவில் இயங்கும் கார்கள் புதிதாக வடிவமைக்கப்படும். இந்த வகைக் கார்கள்அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயக்கப்படும் என்றார் என்றார்.


Click it and Unblock the Notifications
