சாந்தம்" அடைகிறார் திண்டிவனம் ராமமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தன்னுடன் எடுத்துச் சென்ற கட்சி உறுப்பினர் அட்டைகள் மற்றும் கட்சிதொடர்பான ஆவணங்களை திங்கள்கிழமை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் ஒப்படைப்பார் என்று பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சித்தலைவர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்தது. இதனால் வருத்தத்தில் இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. இந்த விஷயம் குறித்துஇருவரிடமும் பேசச் சொல்லி காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டது. அதன்படி அவர்கள் இருவரிடமும் இதுகுறித்து பேசப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கட்சிஆவணங்களைஒப்படைப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸில் இனிமேல் கோஷ்டிபூசல் இருக்காது என்று நம்புகிறேன்.

செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில், சோனியா காந்தி பாண்டிச்சேரி வருகிறார். இதுதவிர, சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர்ராஜ்குமாரை எந்தப் பிரச்சனையுமின்றி அனைத்து ஒத்துழைப்பையும் கொடுப்பதாக கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தெரிவித்துள்ளதாகவும்கூறினார் நாராயணசாமி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+