பவானி ஆற்றில் ரங்கராஜன் அஸ்தி கரைப்பு
நாமக்கல்:
மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி பவானி கூடுதுறையில் கரைக்கப்பட்டது. அவரது மகன் பரிசலில் சென்றுஆற்றில் கரைத்தார்.
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் அஸ்தி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்படதலைவர்கள் மத்திய அமைச்சரின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து ரங்கராஜனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது பூர்வீக வீட்டின் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கார் மூலம் அஸ்தி காலை 9-45 மணிக்கு பவானி கூடுதுறைக்கு கொண்டு வரப்பட்டது. அஸ்தியுடன் ரங்கராஜனின் மனைவி கிட்டி, மகன் மோகன், மகள் ருச்சித்ரா ஆகியோரும் வந்தனர்.
பவானி கூடுதுறையில் அஸ்திக்கு அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட ஏராளமானவர்கள்அஞ்சலி செலுத்தினார்கள்.
மலர் அலங்காரம் செய்யப்பட்ட பரிசலில் வைத்து பவானி ஆறும், காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தியை ரங்கராஜனின் மகன் மோகன்குமாரமங்கலம் கரைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications