படகு கவிழ்ந்து ஆற்றில் 7 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
இந்தூர்:
மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் பகுதியில் 12 சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில், 7 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்தது. இறந்த 7 பேரில் மூன்று பேர் பெண்கள். சிலர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
விபத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் பெர்ச்சா அணைக்கட்டுப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர். யாஸ்மீன் (30), ஜெய்நாப் (3), சைதா(20), தஸ்லீம் (35), ஷகீனா (5), அபி அலி (12), ஹர்தயால்சிங் ஆகியோர் இச்சம்பவத்தில் இறந்துள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications