குழந்தையை தரையில் வீசிக் கொன்ற அன்புத் தந்தை
சென்னை:
தனக்கு பிறக்கவில்லை என்ற சந்தேகத்தில் 7 மாதக் குழந்தையை தரையில் வீசி கொன்ற தந்தையை போலீஸ் தேடி வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னமிட்டீர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராணி (வயது 23).
கட்டட மேஸ்திரியான ராஜாமணியும், ராணியும் கோவையில் கட்டட வேலை செய்து வந்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து2 ஆண்டுகள் ஆகின்றன.
ராணி கர்ப்பமானதில் இருந்து கணவன், மனைவிக்கு இடையே சந்தேகப் பேய் புகுந்து கொண்டது. மனைவியின் கர்ப்பத்திற்கு தாம் காரணமில்லை என்றஉணர்வு ராஜாமணிக்கு ஏற்பட்டது. இதனால் கர்ப்பத்தை கலைக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், ராணி மறுத்து விட்டார். இது அவரது சந்தேகத்தைமேலும் வலுப்படுத்தியது.
இதற்கிடையில் ராணி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எனக்கு பிறந்திருந்தால் குழந்தை இவ்வளவு அழகாக பிறந்திருக்காது என்றுராஜாமணி மனைவியிடம் சண்டை போட்டு வந்தார்.
ஆனால், அதை சட்டை செய்யாமல் குழந்தையை வளர்க்க எண்ணினார் ராணி. சம்பவத்தன்று ஆத்திரத்தோடு ராஜாமணி வீட்டுக்கு திரும்பியபோது, ராணிதன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார். அதை கண்டதும் ராஜாமணிக்கு தலைகால் புரியாத கோபம்.
யாருக்கு பிறந்த குழந்தை இது? இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தாயின் மடியில் சிரித்துக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை பறித்தார்.கால்களை பிடித்துக் கொண்டு தரையில் வீசி அடித்தார். குழந்தையின் தலை சிதறியது.
அந்த காட்சியைக் கண்டதும் அதிர்ச்சியில் ராணி மயங்கி விழுந்தார். எவனுக்கோ பிறந்த குழந்தையை பெற்ற வயிறு இது தானே என்று சொல்லிக்கொண்டே மயங்கிக் கிடந்த ராணியின் வயிற்றில் ஓங்கி உதைத்தார் ராஜாமணி. சுருண்டு விழுந்தார் அப்பெண்.
அக்கம்பக்கத்தவர் மருத்துவமனையில் ராணியை சேர்த்தனர். மறுநாள் கண் விழித்த ராணி, கொலைக்கார கணவன் பற்றி புகார் செய்தார். அதற்குள்ராஜாமணியின் உறவினர்கள், குழந்தையைப் புதைத்து விட்டனர். விவரம் தெரிந்த போலீசார் குழந்தையின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைசெய்தனர். தலைமறைவாகி விட்ட ராஜாமணியை தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications