சிங்கப்பூர் கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி கோப்பையை வென்றது தெ.ஆ.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் சேலஞ்ச் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 35 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
கேரி கிர்ஸ்டன் 62 ரன்களும், நிக்கி போயே 54 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் கபிர் கான், அப்துர் ரஸாக் இருவரும் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினார்.
35 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது இன்னிங்ஸைப் பாகிஸ்தான் தொடங்க இருந்தது. அப்போது மழைபெய்தது. இதையடுத்து பாகிஸ்தானின் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
புதி விதிகளின்படி 35 ஓவர்களில் 215 ரன்கள் எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்குடன் தனதுஇன்னிங்ஸைப் பாகிஸ்தான் தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் எடுக்க பாகிஸ்தான் சிரமப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் விக்கெட்டுகள் தொடர்ந்துவீழ்ந்தபடி இருந்தது.
இதனால், 28.1 ஓவரில் 121 ரன்களுக்குப் பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. இதையடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுகோப்பையை வென்றது.
இந்த ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக நிக்கி போயேவும், தொடரின் சிறந்த ஆட்டக்காரராக கேரி கிர்ஸ்டனும் தேர்வு செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications