121 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது கர்நாடகம்
பெங்களூர்:
வீரப்பனின் கூட்டாளிகள் 121 பேர் மீதான 5 வழக்குகளையும் கர்நாடக அரசு வாபஸ்பெற்றுக் கொண்டது.
இத் தகவலை கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரில் நிருபர்களிடம்திங்கள்கிழமை தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக அதிரடிப்படையினர், வீரப்பனின் கூட்டாளிகள் என கருதப்படும் 121 பேரையும் கைதுசெய்தனர்.
இவர்களில் 12 பெண்கள் உள்பட 51 பேர் தடா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந் நிலையில், கடந்த ஜூலை 30-ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைசந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான்.
கடத்தப்பட்டவர்களை விடுவிக்க 14 கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்திருந்தான்.
அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் தற்போது சிறையில் இருக்கும்51 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதும் அதில் ஒரு கோரிக்கையாகும். 70பேர் ஏற்கெனவே ஜாமீனில் வெளியே உள்ளனர்.
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று 51 பேரையும் விடுதலை செய்ய கர்நாடக அரசுசம்மதம் தெரிவித்தது. அதற்காக, 12 பெண்கள் 51 பேர் மீதும் மைசூர் தடாநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த தடா வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.
ஆனால், அந்த 51 பேர் தவிர 121 பேர் மீதும் மைசூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேலும்சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளால் 51 பேர் ஜாமீனில்விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, தனது கோரிக்கையை கர்நாடக அரசு தவறாகப் புரிந்து கொண்டதுஎன்றும், தான் 51 பேர் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெறக் கோரவில்லை. 121பேர் மீதான அனைத்து வழக்குகளையும்தான் வாபஸ் பெறக் கோரினேன் என்றுவீரப்பன் தெரிவித்தான்.
இதையடுத்து 121 பேர் மீது மைசூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 5வழக்குகளையும் வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம்கிருஷ்ணா கூறியதாவது:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமார் நலமாகவும், விரைவாகவும் விடுதலைஆவதற்காக வீரப்பனின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
அவனது கோரிக்கையை ஏற்று 121 பேர் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ்பெறும்படி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மீதான எந்த வழக்கும் இனிநடத்தப்படாது.
வீரப்பனை மூன்றாவது முறையாகச் சந்திக்க அரசுத் தூதர் நக்கீரன் கோபால்திங்கள்கிழமை இரவு காட்டுக்குள் செல்கிறார் என்றார் கிருஷ்ணா.
நிருபர்கள் சந்திப்பின்போது உடன் இருந்த கர்நாடக உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜுன கார்கே, 121 பேர் மீதான வழக்குகள் தான் வாபஸ் பெறப்பட்டுள்ளவேதவிர, வீரப்பன் மற்றும் தலைமறைவாக உள்ளவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்பெறப்படவில்லை. அவை தொடர்ந்து நடக்கும் என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications