கிப்ஸ், வில்லியம்ஸுக்கு 1 ஆண்டு தடை
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கிப்ஸ் மற்றும் வில்லியம்ஸ் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதி வரை கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியேவுடனான மேட்ச் பிக்ஸிங்கில் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து இத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மைக்கேல் குபெர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மூன்று பேர் கொண்ட ஒழுங்குக் கமிட்டி இத் தடை தொடர்பான அறிவிப்பைதிங்கள்கிழமை பிறப்பித்தது.
இது தவிர, அக்டோபர் 31-ம் தேதிக்குள் கிப்ஸ் 60 ஆயிரம் மதிப்புள்ள தென் ஆப்பிரிக்க கரன்சியையும் (ரான்ட்), வில்லியம்ஸ் 10 ஆயிரம் மதிப்புள்ளதென் ஆப்பிரிக்க கரன்சியையும் (ரான்ட்) அபராதமாகச் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உள் நாட்டுக் கிரிக்கெட்டில் விளையாட கிப்ஸுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றார் குபெர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குரோனியேவுக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு குறித்துஎட்வர்ட் கிங் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த கமிட்டியின் விசாரணைக்குப் பிறகுதான் குரோனியேவுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்று தெரியவரும்.
தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்து மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் கிப்ஸ், வில்லியம்ஸ், ஸ்டிரைடம் ஆகியோரும் குரோனியோவுடன் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.
குரோனியே மீது கிங் கமிஷன் விசாரணை நடந்து வருவதால் மற்ற மூன்று பேர் மீதும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே தனியாக விசாரணைநடத்தியது.
கிப்ஸ், வில்லியம்ஸ் இருவருக்கும் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. ஸ்டிரைடமுக்கு அபராதமோ, தடையே விதிக்கப்படவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications