ஆவணங்கள் தாமத்தால் கோபால் பயணமும் தாமதம்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக சந்தன வீரப்பனுடன் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக மூன்றாம் முறையாக அரசு தூதர் நக்கீரன் கோபால் செவ்வாய் கிழமைஅதிகாலை காட்டுக்குச் செல்கிறார்.
வீரப்பனின் முக்கியக் கோரிக்கைகளான கர்நாடக சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகள் விடுதலை,தமிழகத்தில் உள்ள. 5 தமிழ் தீவிரவாதிகள் விடுதலை, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்குரூ.10 கோடி நிவாரணம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆதாரங்களுடன் அவர்புறப்படுகிறார்.
நிவாரண உதவிக்கான நிதியை இரு மாநில அரசுகளும் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்து விட்டது.ஆனால், கர்நாடக சிறையில் உள்ள 121 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க திங்கள் கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டது. அவர்களில் 51 பேருக்கு ஜாமீன் வழங்கி மைசூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கான ஆணைகளும், ஆவணங்களும் கர்நாடகாவில் இருந்து தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், அதை பெற்றுக் கொண்டு கோபால் காட்டுக்கு செல்வார் என்றும் திங்கள்கிழமை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த ஆவணங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தூதரின் திங்கள் கிழமை பயணம்செவ்வாய் கிழமைக்கு மாறியது என்று கூறப்படுகிறது.
இந்த முறை எப்படியும் ராஜ்குமாரை மீட்டு வந்து விடுவேன் என்று திட்டவட்டமாக தூதர்கோபால் தெரிவித்துள்ளதால், வீரப்பன் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கான தகுந்தஆதாரங்களுடன் காட்டிற்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த முறை காட்டுக்கு சென்று திரும்பிர ஒரு வாரம் கூட ஆகலாம் என்று கூறியுள்ள கோபால்,காட்டில் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது கூட தேவையான விளக்கங்களைஇரு மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறார். அதற்கானஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக அரசு வட்டாரம் தெரிவித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications