ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டு 3 இஸ்ரேல் வீரர்கள் சாவு
நாப்லஸ் (இஸ்ரேல்):
பாலஸ்தீனிய தீவிரவாத இயக்கமான ஹமாஸுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன தீவிரவாத இயக்கமான ஹமாஸுக்கும், இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே,மேற்கு கடற்கரை பகுதியில் சனிக்கிழமை நாப்லசுக்கு அருகே உள்ள அசிரா அல்-சாமில்யே என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கடுமையாக நடந்த இந்தசண்டையில், 3 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தீவிரவாதியான மகமூத் அபு ஹானவுட் இந்தசண்டையின் போது காயமடைந்து தப்பி ஓடிவிட்டதாக ராணுவ அதிகாரிகள்தெரிவித்தனர். ஹானவுட், இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சு வார்த்தையை எதிர்த்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1997-ம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த இரு தற்கொலைப்படைத் தாக்குதலில் 21இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் இவர்என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டை நடந்த கிராமத்தை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. ஹெலிகாப்டர்களும்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. அக்கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது என சண்டையைபார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஜெருசேலப் பிரச்சனை, அகதிகள், குடியேற்றப் பிரச்சனை மற்றும் எல்லைப் பிரச்சனைகுறித்து செப்படம்பர் மாத மத்திக்குள அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தபாலஸ்தீனியர்களும், இஸ்ரேலியர்களும் தீவிரமாக முயன்று வரும் வேளையில், இந்தசண்டை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications