உலகின் இரண்டாவது உயரமான டவரில் தீ
மாஸ்கோ:
உலகிலேயே இரண்டாவது உயரமான டவராகக் கருதப்படும் மாஸ்கோ டவரில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் பணியினர்ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 540 மீட்டர் உயரமுள்ள மாஸ்கோவில் ஓஸ்டான்கினோ டிவி டவரில் ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்தது. டவரின் உச்சியில் உள்ள மின்சாதனக் கருவியில்ஏற்பட்ட கோளாறால் இத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீப்பற்றியுள்ள டவருக்குள் சிக்கியிருக்கும் 2 பேரை மீட்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லிப்ட் இயக்கும்பெண்ணும், தீயணைப்புத் துறை வீரரும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
டவரின் உச்சியில் பிடித்த தீ, நிலமட்டத்திலிருந்து டவரின் 140-வது மீட்டர் வரை பரவியுள்ளது.
இந்த டவரில் இயங்கி வந்த 3 தேசிய தொலைக்காட்சி நிறுவனங்கள், சுழலும் ரெஸ்டாரண்ட் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன.தீப்பிடிக்காத டவரின் கீழ்ப்பகுதியில் உள்ள நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டன என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இத் தீயால் டவர் இடிந்து விழும் என்ற அச்சம் அப் பகுதி மக்களிடையே நிலவுகிறது. அதனால், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களும்மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
டவரின் சில பகுதிகளில் தீ அணைக்கப்பட்டுவிட்டது. தீப்பிடித்த கேபிள்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத் துறைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1967-ம் ஆண்டு கட்டப்பட்டது இந்த ஓஸ்டாகினோ டவர். சோவியத் ரஷ்யவின் பொறியியல் துறை வல்லமைக்கு எடுத்துக்காட்டாக இந்த டவர்இருந்தது.
540 மீட்டர் உயரமுள்ள இந்த டவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபில் டவரை விட இரு மடங்கு உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் டொரான்டோ நகரில் சி.என்.என். டவர் கட்டப்படும் வரை உலகின் மிகப் பெரிய டவராக ஓஸ்டான்கினோ டவர் விளங்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications