விஜய் ரசிகர்கள் மீது தடியடி .. 5 பேர் மண்டை உடைந்தது
சென்னை:
திருச்சியில் நடிகர் விஜயை சந்திக்க வந்த ரசிகர்கள் கல்லெறிந்து கலாட்டா செய்ததால், போலீசார் தடியடி நடத்திவிரட்டினர். இதில் 5 ரசிகர்கள் மண்டை உடைந்தது.
"குஷி படத்தின் நூறாவது நாள் விழா மற்றும் ரசிகர் மன்ற விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர்விஜய் திருச்சி வந்திருந்தார். விழாவில் ஏழை எளியவர்களுக்கு இலவச தையல் மிஷின்கள், இலவச வேட்டி,சேலைகளை விஜய் வழங்குவார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து நடிகர் விஜய் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு ரசிகர்கள் திரண்டனர். அபிமான நடிகரை சந்திக்கவேண்டும் என்று ஹோட்டலுக்குள் நுழைய முண்டியடித்தனர். ஆனால், விஜய் அறையை விட்டு வெளியேவரவில்லை. ரசிகர்களை சந்திக்கவும் விரும்பவில்லை. ஆனால், நேரம் செல்ல செல்ல வெளியில் ரசிகர்கள் கூட்டம்அதிகரித்தது. பொறுமையிழந்த ரசிகர்கள் கூச்சல், கோஷங்கள் எழுப்பினர்.
ஹோட்டலின் கதவை இழுத்து மூடிய போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால்ஆவேசமடைந்த ரசிகர்கள் கல் வீசினர். ஹோட்டல் கண்ணாடிகள் தூள் தூளாகின. இதையடுத்து போலீசார் தடியடிநடத்தி ரசிகர்களை விரட்டி அடித்தனர்.
கூட்டத்தை கலைத்து விட்ட திருப்தியில் போலீசார் போய் விட்டனர். ஆனால் ரசிகர்கள் விடவில்லை. ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் அங்கே முற்றுகையிட்டனர். விஜயை சந்திக்காமல் போக மாட்டோம் என்றுகோஷமிட்டனர். வேறு வழியின்றி விஜயின் தந்தை டைரக்டர் சந்திரசேகர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.
விஜய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அமைதியாக கலைந்து செல்லுங்கள், மாலையில் உங்களைசந்திப்பார் என்றார். இதையடுத்து ரசிகர்கள் கிளம்பினர்.
போலீஸ் தடியடியில் 5 ரசிகர்கள் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications