பேரணிகளில் பங்கேற்க மாட்டார் சந்திரிகா
கொழும்பு:
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக, பொதுத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பேரணிகளில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலந்து கொள்ளமாட்டார். அவருக்குப் பதிலாக, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்வார்.
ஆளும் கூட்டணியான மக்கள் கூட்டணியில் அதிபர் சந்திரிகாவின் இலங்கை சுதந்திர கட்சி அங்கம் வகிக்கிறது. இக்கட்சியின் சார்பில் பொதுத்தேர்தல்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரச்சாரக் கூட்டங்களில் அதிபர் சந்திரிகா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சந்திரிகா கட்சியான இலங்கை சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் எம்.ஜெயரத்னே கூறுகையில், இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் மாவட்ட அளவில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் மட்டும்அதிபர் கலந்து கொள்வார்.
இலங்கையின் தென்பகுதியான கெகாலே, மெட்டாரா பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் அதிபர் கலந்து கொண்டார். இதே போல் இன்னும் ஐந்துகூட்டங்களில் அவர் கலந்து கொள்வார். ஆனால் பேரணிகளில் சந்திரிகா கலந்து கொள்ள மாட்டார் என்றார்.
கடந்த வருடம் தலைநகர் கொழும்பிலுள்ள டவுன் ஹாலில் தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட அதிபர் சந்திரிகா மனித வெடிகுண்டால்தாக்கப்பட்டு வலது கண்ணை இழந்தார் என்பதும், ஜூன் மாதம் கட்சியின் மூத்த அமைச்சர் சி.வி.குணரத்னே மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்என்பதும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications