இடம் மாறுகிறது கோவை நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நீதிமன்றங்கள் செவ்வாய்க்கிழமை முதல் புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்குகிறது.
கோவையில் கலெக்டர் அலுவலக வளாகம், குதிரைவண்டி கோர்ட், தாசில்தார் அலுவலக வளாகம் என பல்வேறு இடங்களில் நீதிமன்றங்கள்செயல்பட்டு வந்தன.
இந்த நீதிமன்றங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கட்டடத்தில் செயல்படுத்த அரசிடம் நீண்டநாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ரூ. 10 கோடி செலவில் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த புதிய ஒருங்கிணைந்தநீதிமன்ற வளாகத்திற்கு அனைத்து நீதிமன்றங்களும் மாற்றப்பட்டு செயல்படவுள்ளன.
இந்த நீதிமன்றத்திற்கு அனைத்து ஆவணங்களும் மாற்றப்பட்டன.
புதிய கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றம் செயல்பட ஆரம்பித்தது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இந்த நீதிமன்றத்தை மாநில சட்ட அமைச்சர்ஆலடி அருணா திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications