விமானச் சின்னத்தில் போட்டியிடும் ஹைஜாக்" நாயகே
கொழும்பு:
1982 ம் ஆண்டு விமானத்தைக் கடத்திய வழக்கில் 7 வருட சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானவர், இலங்கையில் நடக்கும் பொதுத்தேர்தலில்,விமான சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தேசியவாத சிங்கள மஹாசமத பூமிபுத்ரா கட்சித் தலைவர் ஹரீஷ் சந்திர விஜயதுங்க இதுகுறித்துக் கூறியதாவது:
இலங்கையில் வரும் அக்டோபர் மாதம் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் செப்டம்பர் 5 ம்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எங்கள் கட்சியான தேசியவாத சிங்கள மஹாசமத பூமிபுத்ர கட்சி சார்பில் போட்டியிட எகநாயகே என்பவர் அனுமதி கேட்டுள்ளார்.விமானத்தைக் கடத்திய வழக்கில் சிறைத் தண்டனை பெற்று விடுதலையடைந்த அவர் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த விதஆட்சேபணையும் இல்லை.
அவர் தெற்கு ஹம்பான்டோடா பகுதியில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடலாம். சட்டப்படி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் தேர்தலில்போட்டியிடுவதில் தவறேதுமில்லை. ஆனால் அவரது மனுவை யாராவது எதிர்த்தால் அதற்கு நீதிமன்றம்தான் சரியான தீர்ப்பு கூற வேண்டும் என்றார்.
முன்னதாக, எகநாயகே 1982-ம் ஆண்டில் ரோமிலிருந்து பாங்காங் சென்று கொண்டிருந்த 747 ரக போயிங் விமானத்தைக் கடத்தினார். பின்னர் தனக்கு ரூ 3லட்சம் பணம் தர வேண்டும். மனைவி (அவர் இத்தாலிக்காரர்) மற்றும் மகனுடன் குடும்பம் நடத்த விரும்புவதால் இத்தாலிக்குச் செல்ல விசா தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
விமானத்தில் பயணம் செய்த 261 பயணிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு அவருக்கு ரூ 3 லட்சத்தைக் கொடுத்தது. பணத்தைப்பெற்றுக் கொண்ட பின்தான் அவர் விமானப் பயணிகளை விடுவித்தார். ஆனால் இலங்கைக்கு வந்தவுடன் அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ரூ 3லட்சத்தைப் பறிமுதல் செய்தனர். அதற்குப்பின் அவருக்கு விமானத்தைக் கடத்தியதற்காக 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் 1986-ல் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் தண்டனைக் காலம் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது. ஜெயில் தண்டனை அனுபவித்துவிடுதலையடைந்த பின் அவரது மனைவி அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
மனைவியைப் பிரிந்த எகநாயகே, இலங்கையில் நுவாரா எலியா பகுதியில் கைடாக வேலை செய்து வந்தார். அதற்குப் பின் தனது மகனுடன் 1998-ம்ஆண்டுதான் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications