மாஸ்கோ டி.வி. டவர் தீ அணைக்கப்பட்டது ... 2 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

உலகின் இரண்டாவது உயரமான டவரான மாஸ்கோ டி.வி. டவரில் ஏற்பட்ட தீயை,ரஷிய தீயணைப்புப் படை வீரர்கள் கடுமையாகப் போராடி அணைத்தனர். டவரில்உள்ள லிப்ட்டில் சிக்கிக் கொண்ட 2 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் தீயணைப்பு வீரர் விலாடிமிர் அர்டியுகோவ், லிப்ட்டை இயக்கும் பெண்ஸ்வெட்லனா லொசேவா ஆகியோர். இருவரும் இருந்த லிப்ட் தரைப் பகுதியில்விழுந்து நொறுங்கிக் கிடந்தது. மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது. இருப்பினும் தீ தற்போதுதான் அணைக்கப்பட்டுள்ளதால், பின்னரேஅதுகுறித்துத் தெரிய வரும்.

கடந்த இரண்டு நாட்களாக மாஸ்கோ டவரில் தீ எரிந்தது. மாஸ்கோவின் முக்கியச்சின்னமாக விளங்கும் இந்த டவரில் இயங்கி வரும் ஒஸ்டன்கினோ டிவி நிலையத்தில்ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பாரீஸில் உள்ள ஈபிள் டவரைப்போல இரு மடங்கு உயரம் கொண்டது இந்த டவர்.

அணு நீர் மூழ்கிக் கப்பல் கடலில் சிக்கியபோது அமைதியாக இருந்ததற்காககடுமையான விமர்சனத்திற்குள்ளான, ரஷிய அதிபர் விலாடிமிர் புடின், மாஸ்கோ டவர்தீவிபத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டார். தீயை அணைப்பற்கான நடவடிக்கைகளுக்குஉத்தரவிட்ட அவர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியும் விவாதித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், நாடு முழுவதிலும் உள்ள முக்கியகட்டடங்களைப் பாதுகாக்க நாம் அக்கறை காட்ட வேண்டும். நாட்டின்பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்டுள்ளவை இவை.

நாடு முக்கியப் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, பொருளாதாரத்தையும் மனதில்கொண்டு அவற்றை அணுக வேண்டும். இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில்நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்றார் புடின்.

இந்த மாதத்தில் ரஷியாவில் நடைபெறும் மூன்றாவது பெரிய விபத்து இது. மாஸ்கோசுரங்கப் பாதையில் நடந்த குண்டுவிபத்தில் 12 பேர் செத்தனர். பிறகு குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 118 பேர் இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+