ஊனமுற்றவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உடல் ஊனற்ற 308 பேருக்கு எட்டு மையங்களில் இலவச கம்யூட்டர் பயிற்சி அளிக்கமுதல்வர் கருணாநிதி உத்திரவிட்டுள்ளார்.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கை, கால்ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 300 பேருக்குகணினி பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என இந்த ஆண்டு நிதிநிலைஅறிக்கையில் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகியஇடங்களில் எட்டு பயிற்சி மையங்கள் அமைத்து 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்செலவில் மொத்தம் முந்நூறு பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாகவழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்தக் கம்யூட்டர் பயிற்சி மூன்று மாத காலம் நடைபெறும். பயிற்சிக்குத் தேர்வுசெய்யப்படும் ஊனற்றோர் ஒவ்வொருவருக்கும், மாதம் ஒன்றுக்கு முந்நூறு ரூபாய்உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+