இன்டர்நெட் காதலனைக் காண வந்து மாயமான மாணவி
சென்னை:
இன்டர்நெட்" காதலனை சந்திக்க சென்னை வந்த ஆந்திர மாணவியை காணவில்லை.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசிப்பவர் நகாம். மத்திய அரசு அதிகாரி. இவரது ஒரே மகள் நேகா. வயது 15. பத்தாம் வகுப்பு மாணவி. ஆங்கிலம்,இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் சரளமாக உரையாடும் நேகாவுக்கு கம்ப்யூட்டர் மீது தீராத காதல்.
வகுப்பறையை விட்டு வீட்டுக்கு வந்ததும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுவார். மணிக்கணக்கில் "சாட் செய்வார். அப்போது அறிமுகமானவர்செந்தில் கோமான். பெங்களூரைச் சொந்த ஊராக கொண்ட இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
இருவரும் இணைய வலையில் சிக்கி காதலர்களாக மாறினர். இ-மெயில் மூலமும், "சாட் மூலமும் மனதை பரிமாறிக் கொண்டனர். காதலனை நேரில்காண்பதற்காக கடந்த 18ம் தேதி பெற்றோரிடம் சொல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார் நேகா.
சென்னை பாரிமுனை வந்து இறங்கியதும் காதலனுக்கு போன் செய்தார். காதலன் கோமானும் காதலியை பார்க்கும் ஆவலில் ஓடோடி வந்துஅழைத்துச் சென்றார். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் நேகாவை தங்க வைத்துள்ளார்.
அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. நேகாவையும் காணவில்லை.
இதற்கிடையில் ஆந்திரா போலீசில் மகளை காணவில்லை என்று தந்தை நகாம் கொடுத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இன்டர்நெட்"காதலன் பற்றிய விவரங்களை, நேகாவின் தோழிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சென்னை வந்த ஆந்திர போலீசார், சென்னை போலீசார் உதவியை நாடினர். இரு போலீஸாரும் இணைந்து இன்டர்நெட் காதலன் செந்தில்கோமானை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நேகா சென்னை வந்த கதையை எல்லாம் ஒப்புக் கொண்டார். ஆனால், சென்னையை விட்டு அவர்செல்ல மறுத்ததாகவும், ஆனால், தாம் அவளை வற்புறுத்தி ஊர் திரும்பும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
இதற்கிடையில் அவர் லாட்ஜை விட்டு எங்கு சென்றார் என்பதே தனக்குத் தெரியாது என்று கூறி விட்டார் கோமான்.
லாட்ஜ் மேலாளர் கொடுத்த தகவல்படி, 20-ம் தேதி மாலை நேகாவை 4 பெண்கள், 4 ஆண்கள் வந்து அழைத்துச் சென்றனர் என்று தெரியவந்துள்ளது.அந்த கும்பல் யார் என்பது குறித்து போலீசார் இப்போது துப்பு துலக்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications