திடீர் கட்சிகளுக்கு ஆயுசு கம்மி"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திடீரென்று முளைத்துள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் வரை ஆயுளோடு இருக்குமா என்பதே சந்தேகம் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னக் குழந்தைதலைமையில் 2500 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிபேசியதாவது:

அரசியல் எப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் நெருங்க நெருங்கசிலருக்கு திடீரென்று மக்களைப் பற்றிய கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்காகப் பணியாற்றப் போகிறேன் என்றுஅரசியல் கட்சிகள் திடீரென்று முளைத்து வருகின்றன.

அக்கட்சிகள் தேர்தல் வரை ஆயுளோடு இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏற்கனவே வேரூன்றி உள்ள கட்சிகள்தி.மு.க.வைப் பற்றி மனம்போன போக்கில் பேசிக் கொண்டிருக்கின்றன.

அதற்கு முக்கியக் காரணம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும்ஆட்சிக்கு வரலாம். ஆனால், ஜனநாயகத்தை உணர்ந்தவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதும் மக்கள் பிரச்னைகளுக்காக போராடி வந்துள்ளது. நான்காவது முறையாகஆட்சிக்கு வந்த போதும் மக்கள் பிரச்னைகளுக்காக பணியாற்றி வருகிறோம். ஆனால், அது மாற்றாரின் கண்களைஉறுத்துகிறது. தி.மு.க.வால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறுகிறார்கள்.

6 கோடி மக்களின் பிரச்னைகளையும், எந்தக் கட்சியாலும் தீர்க்க முடியாது. ஆனால் 90 சதவீதம் பிரச்னைகள்தி.மு.க ஆட்சியில் தீர்க்கப்பட்டுள்ளது. நாம் யாரும் இழுத்த இழுப்பிற்கு செல்பவர்கள் இல்லை. பிரிந்தவர்கள்அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளோம் என்றார் முதல்வர் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+