பிரதமர் செல்வார் பின்னே .. டாக்டர் சென்றார் முன்னே ..

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக 12 பேர் கொண்ட இந்திய குழுஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த 12 பேர் கொண்ட குழுவில் பிரதமரின் தனி மருத்துவ ஆலோசகரும் சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக மூட்டு வலியால் பிரதமர் வாஜ்பாய்அவதிப்பட்டு வருகிறார்.

இதனால், அவரது அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்படும் அல்லது பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், தனதுஅமெரிக்க பயணத் திட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதில் எந்த மாறுதலும் இல்லை என்று வாஜ்பாய் அறிவித்து விட்டார்.

இதையடுத்து, வாஜ்பாயின் அமெரிக்க பயணத்துக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க 12 பேர் கொண்ட குழு அமெரிக்கா சென்றுள்ளது. இதில் பிரதமரின் தனி மருத்துவர்அனூப் மிஸ்ராவும் இடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் செப்டம்பர் 5-ம் தேதி முதல் 17-ம் தேதி வாஜ்பாய் சுற்றுப் பயணம் செய்கிறார்.

அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுடன் இரு தரப்பு உறவுகள் குறித்தும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்துகிறார். அமெரிக்காவில் உள்ள அந்நாட்டு மற்றும் இந்தியத் தொழிலதிபர்களுடனும் அவர் பேச்சு நடத்துகிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திலும் வாஜ்பாய் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+