கள்ளத்தோணியில் இலங்கை செல்ல முயன்ற 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில், இலங்கை வாலிபர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்துபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் சேரன்கோட்டை கடற்கரைப் பகுதியில் கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் ரோந்து சுற்றி வந்த போது, அங்கே சிலவாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் நால்வரும் இலங்கை முல்லைத் தீவைச் சேர்ந்த ஞானசேகரன் (30), வவுனியாவைச் சேர்ந்தகருனேந்திரன் (31), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் (32), கிளிநொச்சியைச் சேர்ந்த மோந்திரன் (31) சேர்ந்த வாலிபர்கள் என்று தெரிய வந்தது.
நான்கு பேரும் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications