இந்து நாடார்களுக்கு தனி இட ஒதுக்கீடு ... கேரள ஹைகோர்ட்
கொச்சி:
இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூகத்தினருக்கு சேர்த்து இடஒதுக்கீடு வழங்காமல் தனித்தனியாக வழங்க வேண்டுமென்று என்றுகேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1978---ம் ஆண்டு டிசம்பர்-13 ம் தேதி, இடஒதுக்கீடு தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும்கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.வி.சாவந்த் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்து நாடார்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கோரி இந்து நாடார் சங்க பொதுச்செயலாளர் என்.கே.பாஷி,உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தனது மனுவில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ நாடார்களை விட, இந்து நாடார் பிரிவினர் சமூக, பொருளாதார, கல்வியில் பின்தங்கியுள்ளனர். ஆனால்தற்போது இருபிரிவினருக்கும் சேர்த்துதான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது நியாயமற்றது என்று கூறியிருந்தார்.
அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இடஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. கல்வி, சமூக,பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி சாவந்த் மேற்கண்டதீர்ப்பை வழங்கினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications