115 தமிழ் கைதிகளை விடுவிக்க செப். 1 வரை இடைக்காலத் தடை
டெல்லி:
கர்நாடக சிறைகளிலுள்ள 115 தமிழ் கைதிகளை விடுவிப்பது தொடர்பான கர்நாடக அரசின் உத்தரவிற்கு சுப்ரீம்கோர்ட் செப்டம்பர் 1 ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
நீதிபதிகள் எஸ்.பி.பரூச்சா, எஸ்.எஸ்.எம்.குவாட்ரி, என்.சந்தோஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்தத்தீர்ப்பை செவ்வாய்க்கிழமை கூறியது.
நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், மைசூர் மற்றும் கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள51 தடா கைதிகள் உள்ளிட்ட தமிழ் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கைவிடுத்திருந்தான்.
இந்தக் கோரிக்கைப்படி, கர்நாடக மாநில அரசு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது போடப்பட்டிருந்தவழக்குகளை வாபஸ் பெற்றது. மேலும் தடா வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட 51 கைதிகளை ஜாமீனில் விடவும்முடிவு செய்தது. ஆனால், வீரப்பனால் கொலை செய்யப்பட்ட கர்நாடக சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின்தந்தை அப்துல் கரீம், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு வீரப்பனின் கூட்டாளிகள் என்று கருதப்பட்ட 115 பேர் விடுதலை குறித்ததீர்ப்பை வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை நிறுத்தி வைக்கும்படி இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications