யாழ்ப்பாணத்தில் புலிகள், ராணுவம் கடும் சண்டை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள புத்தூர் பகுதியில் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாக புலிகள் முகாம்கள் மீதுராணுவம், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டு வீசித் தாக்கின. இந்தக் கடும் தாக்குதலால் அப்பகுதியில் வாழும்அப்பாவிப் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி லியோனல் பாலகல்லி கூறுகையில், வடக்குப் பகுதியில் புலிகள் ஆதிக்கம்அதிகமாக உள்ளது. இருந்தாலும் தற்போது ராணுவத்தின் தீவிர தாக்குதல் காரணமாக புலிகள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடும் பயிற்சி பெற்றுள்ளதால், எந்த பாதிப்பையும் தாங்கும் திறன் பெற்றுள்ளனர்என்றார்.












Click it and Unblock the Notifications