பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியா பின்தங்கியே உள்ளது"
டெல்லி:
இந்தியாவில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றம் 2000-ம் ஆண்டில்எதிர்பார்க்கப்பட்ட நிலையை எட்டவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இந்திய தன்னார்வ சுகாதாரக் கழகமும், உலக சுகாதாரக் கழகமும் இணைந்து நடத்தியஆய்வொன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்தில் 2000-ம் ஆண்டிற்குள் சிறந்த நிலையை அடைய இந்தியாதிட்டமிட்டிருந்தது ஆனால் அந்த நிலையை அடையவில்லை.
பெண் சிசுக் கொலை, குறைவான ஊட்டச்சத்துள்ள உணவு, மனநிலை பாதிப்பு, தற்கொலை,பாலியியல் பலாத்காரம் மற்றும் மாறான பாலியல் உறவுகளின் விகிதம் அதிகரித்திருப்பதேஇதற்குக் காரணம்.
4 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது.
பூப்படைந்த பெண்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இது பெண்களுக்குசரியான சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை என்பதையும், அவர்களின் வாழ்வு நிலைஉயராமல் உள்ளதையும் உணர்த்துகிறது.
தேசிய அளவில் கர்ப்பிணிப் பெண்களுக்குகான நோய் தடுப்பு வசதிகள் மிகவம் குறைவாகஉள்ளது.
1901-ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் இருந்தனர். 1991-ம் ஆண்டில் 927பெண்களே இருந்தனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications