ஆந்திராவில் துப்பாக்கிச் சூடு ... தமிழகத்தில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அ.தி.மு.க, த.மா.கா.கம்யூனிஸ்ட் கட்சிகள் வியாழக்கிழமை கூட்டாக போராட்டம் நடத்துகின்றன.

இது குறித்து, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்சங்கரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய பா.ஜ.க., தி.மு.க கூட்டணி அரசு மின்சாரத்தை வர்த்தக மயமாக்க, தனியார்மயமாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் மின்சார மசோதாவைஅறிமுகப்படுத்தியுள்ளது.

இதேபோல, ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேச அரசு, மின்சார கட்டணத்தைபலமடங்கு உயர்த்தியுள்ளது. இவற்றைக் கண்டித்தும், உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் கடந்த 2 மாதங்களாக ஆந்திர மாநிலத்தில்தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டபேரணி மீது காவல் துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு , துப்பாகிச்சூடுஎன காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் நான்குபேர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் உட்பட பலர் காயமுற்றுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ மனையில் ஆறு பேர்கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது.

இந்தக்கொடூரத் தாக்குதலையும், துப்பாக்கிச் சூட்டையும் கண்டிக்கிறோம்.காவல்துறையினர் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்கும், பலர்படுகாயமடைந்தற்கும் இதர சேதாரங்களுக்கும் பா.ஜ.க , தி.மு.க கூட்டணியைச்சேர்ந்த ஆந்திர மாநில தெலுங்கு தேச அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசின் இத்தகைய கொடூர ஜனநாயக விரோதநடவடிக்கையை கண்டித்து வியாழக்கிழமையன்று சென்னையில் பெருந்திரள்ளானமக்கள் கலந்து கொள்ளும் கண்டன ஆர்பாட்டம் நடத்திட அ.தி.மு.க, த.மா.கா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மற்ற மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளையும்அழைத்துள்ளோம்.

ஆந்திர மாநில தெலுங்குதேச அரசின் கொடிய அடக்குமுறை நடவடிக்கைக்குஎதிராக குரல் எழுப்பிட முன் வரவேண்டுமென்று ஜனநாயக, தேசபக்த சக்திகளைகேட்டுக்கொள்கிறோம் என்று சங்கரய்யா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+