வீரப்பனை ஏமாற்ற மாட்டோம் என்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழக, கர்நாடக முதல்வர்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாற மாட்டார்கள் என்பது வீரப்பனுக்கு நன்றாகத்தெரியும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறினார்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் தீவிர முயற்சிகள்மேற்கொண்டு வருகின்றன.
வீரப்பன் கோரிக்கைப்படி, கர்நாடகத்தில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்குகர்நாடக அரசு ஒத்துக் கொண்ட போதிலும், சுப்ரீம் கோர்ட், கைதிகளை விடுவிப்பதற்கு செப்டம்பர் 1 ம் தேதி வரைஇடைக்கால தடை விதித்துள்ளது.
இதற்கிடையே நிருபர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கருணாநிதி கூறுகையில், நானோ, கர்நாடக முதல்வர்கருணாநிதியோ வீரப்பனின் கோரிக்கைப்படி கைதிகளை விடுவிப்பதில் தாமதம் காட்ட மாட்டோம். அதாவதுவீரப்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாற மாட்டோம்.
இதை வீரப்பன் நன்கு புரிந்து கொள்வார். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை 1-ம் தேதியன்று இருப்பதால் சட்டப்படிமேற்கொண்டு எதுவும் கூற முடியாது என்றார் முதல்வர் கருணாநிதி.
"ராஜ்குமார் விடுதலை தாமதம் ஆகாது
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை உத்தரவினால், நடிகர் ராஜ்குமார் விடுதலையில் எந்தத்தாமதமும் ஏற்படாது என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து, உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து ஆலோசித்தார் கிருஷ்ணா. பின்னர் நிருபர்களிடம் பேசியகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும்.
இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு மாநில அரசுகளும் அனைத்து நடவடிக்கைகளையும்மேற்கொண்டு வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications