புலிகளுக்கு வரி செலுத்தாத தமிழர் பகுதிகளில் குடிநீர் சப்ளை கட்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

யாழ்ப்பாணத்தில், ராணுவ வீரர்களுடன் சண்டையிட்டு வரும் விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்த மறுத்ததால், தமிழர் பகுதிகளுக்கு புலிகள் குடிநீர் சப்ளையைநிறுத்தி விட்டனர்.

இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்காக புலிகள் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளிலிருந்து நிதி திரட்டி வருகின்றனர்.அதுமட்டுமின்றி இலங்கையில் வாழும் தமிழர்களிடம் நிதி வசூல் செய்கின்றனர். வரி செலுத்தாதவர்களைத் துன்புறுத்தி வசூல் செய்வதாகக் தெரிகிறது.

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வலசென்னை காகித தொழிற்சாலைக்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வாகனேரி என்ற இடத்திலிருந்து குடிநீர்சப்ளை செய்யப்படுகிறது. காகித நிர்வாகத்தினர் புலிகளுக்கு வரி செலுத்த மறுத்து விட்டதால், புலிகள் வலசென்னை பகுதிக்குச் செல்லும் குடிநீர் குழாயைத்துண்டித்து விட்டனர். இதனால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர்.

செய்தி வெளியிடத் தடை:

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில், விடுதலைப் புலிகளுடன், ராணுவ வீரர்கள் சண்டையிடுவது குறித்து செய்தி வெளியிட இலங்கை அரசு பத்திரிக்கைகளுக்குத் தடைவிதித்திருந்தது. அதோடு விடுதலைப்புலிகள், ராணுவ வீரர்கள் சண்டை குறித்த செய்திகளை தணிக்கை செய்த பின்பே வெளியிட வேண்டும் என்று இலங்கை அரசுகெடுபிடி செய்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்தத் தணிக்கை முறையை நீக்குமாறுஉத்தரவிட்டதோடு, இலங்கை அரசுக்கும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் மீண்டும் பத்திரிகைகளிடம் அரசு கெடுபிடியாக நடந்து கொள்வதாக புகார்கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+