கோவை துணிக்கடையில் தீ ... லட்சக்கணக்கில் சேதம்
கோவை:
கோவையில் பிரபலமான ஜவுளிக் கடை ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம்மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமாயின.
கோவை ஒப்பணக்கார வீதியில் குமரன் சில்க்ஸ் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் புதன்கிழமை மதியம் 3 மணி அளவில் திடீரென மூன்றாவதுதளத்தில் தீப் பிடித்து எரிந்தது.
இந்த தளத்தில் இருந்த துணிகள் அனைத்தும் தீயில் கருகி எரிந்தன. இவற்றின் மதிப்புபல லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. இக்கடை தீப் பிடித்துஎரிந்ததையடுத்து ஒப்பணக்கார வீதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு வண்டிகள் சூழ்ந்து கொண்டு தீயை அணைத்தன. மூன்றாவது மற்றும் மேல்தளத்தில் மாட்டிக் கொண்ட பொதுமக்களை தீயணைப்பு படையினர் பத்திரமாகமீட்டனர்.
இத் தீ விபத்தில் சிலருக்கு தீக் காயம் ஏற்பட்டது. இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தீப் பிடித்தததற்கான காரணம்உடனடியாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications