என்று நிற்கும் இந்த களையெடுப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு புறம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இன்னொரு புறம் மூப்பனார் கர்ஜிக்கிறார்.

மற்ற கூட்டணி கட்சிகளும் எத்தனை நாட்கள் இந்த கூட்டணியில் தொடருவோம்என்பது புரியாமல் யோசித்துக் கொண்டிருக்க. அ.தி.மு.க. வினரும் சற்றுகுழப்பத்துடனேயே இருக்கிறார்கள்.

அம்மா என்ன செய்துகிட்டு இருக்காங்கன்னே புரியலை. கூட்டணி யாரு கூட வைக்கப்போறாங்க. எப்படி செயல்படப் போறாங்கன்னும் புரியலை என்று அ.தி.மு.கவினரும்குழம்பிக் கொண்டிருக்க, அ.தி.மு.க வில் இன்னும் களையெடுப்புப் பணிகளும்முடிந்தபாடில்லை.

முன்னாள், இன்னாள் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என்றுநூற்றுக்கணக்கில் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களேஇருக்கின்ற நிலையில் அம்மா இந்த களையெடுப்புப் பணிகளை நிறுத்துவாரா என்றுஅ.தி.மு.க வினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

லேட்டஸ்ட் அம்மாவின் களையெடுப்புப் பட்டியல், மகளிர் அணி பக்கம்தாவியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் விதமாக, டி.வி.சீதா, இவர்நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தும்பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக புதிய மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக லீலா வீராவும்,பொதுக்குழு உறுப்பினராக கவுன்சிலர் சாம்பவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்ல தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில்இருந்து வசந்தா கோவிந்தராஜ் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் எச். முத்துலட்சுமிநியமிக்கப்படுகிறார்.

இதேமாதிரி , கரூர் மாவட்டத்தில் கண்ணகி சேகர், நாமக்கல் மாவட்டத்தில்பொன்னுமணி, காரைக்கால் மாவட்டத்தில் காமாட்சி பழனி வேலுநீக்கப்பட்டுள்ளார்கள். இப்படி நீக்கல் பட்டியல்கள் என்று நிற்கும் என்பது புரியாமல்பலர் கலங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வரை அம்மா இப்படி களையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தால் , கட்சிபலவீனமடையும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நீக்கப்பட்ட ஒவ்வொருவரும்கணிசமான வாக்குகளை பிரித்துவிட்டால் கட்சி என்னாகும் என்பது தான் எங்கள்கவலையே என்று ஆதங்கப்படுகிறார்கள் உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+