121 கைதிகள் மீதான வழக்கு ரத்து இல்லை: கர்நாடக அமைச்சர்
பெங்களூர்:
வீரப்பன் விடுதலை செய்யக் கோரியுள்ள 121 தமிழ் கைதிகள் மீது இந்திய குற்றவியல்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெறவில்லைஎன்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் சந்திரே கெளடா கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு மாதத்திற்குமுன்பு கடத்திச் சென்றார். இவர்களை விடுவிக்க வேண்டுமென்றால், 121 தமிழ்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வீரப்பன் விடுத்தான்.
இதையடுத்து 121 கைதிகள் மீதான வழக்குகளை கர்நாடக அரசு வாபஸ் பெறுவதாகசெய்திகள் வெளியாகின.இதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்ட சப்இன்ஸ்பெக்டரின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.இதனால் 121 பேரும் விடுதலையாவது தள்ளிப் போயுள்ளது.
இந்த நிலையில் 121 பேர் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெறவில்லைஎன்று மாநில சட்ட அமைச்சர் சந்திரே கெளடா கூறியுள்ளார். பெங்களூரில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அனைத்துக் கைதிகளும் ஜாமீனில்விடுதலையாகியதும்தான் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துமுடிவு செய்யப்படும்.
கைதிகள் மீதான புகார்களை கைவிடுவது தொடர்பாக சட்டப்படிதான் மாநில அரசுசெயல்பட்டு வருகிறது. வீரப்பனின் கூட்டாளிகள் 51 பேர் மீதான தடா வழக்குகளைஎந்தச் சூழ்நிலையில் வாபஸ் பெற்றோம் என்பதை சுப்ரீம் கோர்ட்டில்விளக்கியுள்ளோம். தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே தமிழ் கைதிகள்மீதான தடா வழக்குகளை வாபஸ் பெறுவது என்ற முடிவுக்கு வந்தோம்.
சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை காரணமாக ராஜ்குமாரை மீட்பதில் தாமதம் ஏற்படும்என்று கூற முடியாது. எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்திருக்கிறோம்.கோர்ட்டுக்கு உத்தரவிட மாநில அரசினால் முடியாது. நக்கீரன் கோபால் இப்போதுஏற்பட்டுள்ள சூழ்நிலையை வீரப்பனுக்கு விளக்குவார் என்று நம்புகிறோம்.
1995-ம் ஆண்டு தடா சட்டம் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு கர்நாடகத்தில் 14 தடாவழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது 5வழக்குகள் இருந்தன என்றார் அவர்.
இதற்கிடையே, டெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை கர்நாடகம் திரும்பிய மாநிலஅட்வகேட் ஜெனரல் ஜெயராம், முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications