காதலுக்கு மரியாதை செய்த காக்கிச் சட்டை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முஸ்லீம் பெண்ணுக்கும், இந்து இளைஞருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் நிறைவேறகாவல் துறையினர் கை கொடுத்தனர்.அதன் விளைவு பெற்றோர் ஆசியுடன் காதல்கலப்பு மணம் இனிமே முடிந்தது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் ராமசாமி ஆச்சாரி. அவரது மகன்குலசேகர பாண்டியன். வயது 26. இப்பகுதிக்கு அருகில் உள்ள சாமிகுளத்தைசேர்ந்தவர் சீனி ராவுத்தர். இவரது மகள் நாகூரம்மாள். வயது 20.

குலசேகரபாண்டியனுக்கும், நாகூரம்மாளுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மதவேற்றுமையை மறந்து இவர்கள் இருவரும் இணை பிரியாத காதலர்களாக வலம்வந்தனர்.

காதலர்களாக திரிந்த இருவரும் கணவன் - மனைவியாக மாற விரும்பினர். விஷயம்தெரிந்த பெற்றோர் வீறு கொண்டு எழுந்தனர். சாதி, மதம் எனப் பேசி இருவரையும்பிரிக்கத் திட்டமிட்டனர்.

காதலுக்கு எதிராக பெற்றோர் கிளம்பியதை அறிந்ததும் காதலர் இருவரும் ரகசியதிருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தனர். அந்த முடிவோடு வீட்டை விட்டுவெளியேறினர்.

பஸ் நிலையத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டு, எங்கே செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமார்அகர்வால் அந்த வழியாக சென்றார். அவர் கண்ணில் இந்த காதல் ஜோடிகள் பட்டனர்.

போலீஸ் பார்வை ஆயிற்றே. விஷயம் புரிந்து அந்த ஜோடியை அழைத்து அங்கேயேவிசாரித்தார். துணிச்சலுடன் விருப்பத்தை தெரிவித்தனர் காதலர்கள். தன்னுடையகாரில் அவர்களை அழைத்துக் கொண்டு சின்னமனூர் காவல் நிலையத்திற்கு வந்தார்.

போலீசார் மூலம் இருவரது வீட்டிற்கும் விஷயத்தை சொன்னார். பதற்றத்துடன் பறந்துவந்தனர் பெற்றோர்கள். அவர்கள் முன்னிலையில் காதலர்கள் விசாரிக்கப்பட்டனர்.நடந்தால் காதல் திருமணம்; இல்லையேல் மரணம் என்று பெற்றோர் முன்னிலையில்கண்ணீர் வாக்குமூலம் அளித்தனர் அந்த இளம் ஜோடிகள்.

காதலர்களின் கண்ணீர் பெற்றோர்களின் கல் மனதை கரைத்தது. விளைவு காதல் ஜோடிகல்யாணத் தம்பதிகளாகினர். காவல் துறையினர் முன்னிலையில் காதல் கலப்பு மணம்முடித்து தம்பதிகள் வீடு திரும்பினர்.

நாமும் வாழ்த்துவோம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+