ஜாமீன் கேட்கிறார் பத்மாவதி ஷா
பாண்டிச்சேரி:
பார்வதி ஷா வழக்கில் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்ட அவரது மாமியார் பத்மாவதி ஷா ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்ற ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி வைர வியாபாரியான ரவி ஷாவின் மனைவியான பார்வதி ஷா அவரது மைத்துனரான கமல் ஷாவால்கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கமல் ஷா குற்றவாளி என நிரூபணமானதால் அவருக்கு தூக்கு தண்டனைமற்றும் 12 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அவரது தாயாரான பத்மாவதி ஷா கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் சாட்சிகளை அழித்த குற்றத்திற்காக இரண்டாண்டுகடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் பத்மாவதி ஷா தான் ஏற்கனவே 13 மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்டதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தலைைமை செஷன்ஸ் நீதிபதி குமார் வியாழக்கிழமையன்று விசாரணை செய்வார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications